1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cm
Last Modified: சனி, 6 ஜனவரி 2018 (14:11 IST)

அஞ்சலிக்குப் பிறகு ரகுல் ப்ரீத்சிங் தான்...

அஞ்சலிக்குப் பிறகு இந்த விஷயத்தை ரகுல் ப்ரீத்சிங் தான் செய்கிறார் என்கிறார்கள்.



விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை, கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், தான் நடித்த ‘பலூன்’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக சில மணி நேரம் ‘பிக் பாஸ்’ ஹவுஸுக்குள் சென்றுவந்தார் அஞ்சலி.

அஞ்சலி செய்ததுபோலவே ரகுல் ப்ரீத்சிங்கும் ‘பிக் பாஸ்’ ஹவுஸுக்குள் செல்ல இருக்கிறார். ஹிந்தியில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 11வது சீஸன் நடைபெற்று வருகிறது. சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் பைனல், ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதற்குள் தான் நடித்துள்ள ‘அய்யாரி’ ஹிந்திப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ‘பிக் பாஸ்’ ஹவுஸுக்குள் செல்ல இருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங். கார்த்தி ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்துள்ள ரகுல் ப்ரீத்சிங், அடுத்து சூர்யா ஜோடியாக நடிக்கிறார்.