1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 31 ஜூலை 2021 (10:42 IST)

ஒல்லிப்பிச்சனாக மாறிய ரகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை ரகுல் ப்ரித் சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.

சமீபத்தில் போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் அவர் சிக்கியதாக எழுந்த செய்திகள் சலசலப்பை உருவாக்கின.  அதிலிருந்து எல்லாம் மீண்டுள்ள அவர் இப்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இயங்க ஆரம்பித்துள்ளார். அந்தவகையில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களில் வழக்கத்தை விட மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.