1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 ஜூன் 2020 (08:13 IST)

சுஷாந்த் என் கனவில் வந்தார்… என் மகனாக பிறப்பார் – சர்ச்சையைக் கிளப்பிய நடிகை!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தனது கனவில் வந்து மகனாக பிறப்பார் என்று கூறியதாக தெரிவித்த ராக்கி சாவந்தை ரசிகர்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

பாலிவுட்டின் பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) சில தினங்களுக்கு அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட்டில் நிலவும் வாரிசுகளின் ஆதிக்கமே சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகையான ராக்கி சாவந்த், சுஷாந்த் மரணம் குறித்து ‘சுஷாந்த் என் கனவில் வந்து எனக்கு மகனாக பிறக்கப்போவதாக சொன்னார்’ என சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்தார். அவரின் இந்த கருத்து ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த ’இந்த சூழ்நிலையிலும் இப்படி பேச நீங்கள் வெட்கப்படவேண்டும்’ என கமெண்ட்டுகளில் திட்டி தீர்த்து வருகின்றனர்.