1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (15:43 IST)

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி.. கமல் எச்சரிக்கை..!

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரில் மோசடி நடப்பதாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
 
ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்ட்களையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகளை எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
 
எங்களது ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதி இன்றி பயன்படுத்தி மோசடியில் ஈடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன் லைகா நிறுவனமும் இதே போன்ற ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran