1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (15:57 IST)

தர்பார் படத்தில் இணைந்த காலா வில்லன்! படம் பக்கா மாஸ் தான்!

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 


 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.  ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.


 
இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலென்னவென்றால் தர்பார் படத்தில் மீண்டும் ஒரு நடிகர் இணைந்துள்ளார். அவர் காலா படத்தில் நானா படேகருக்கு உதவியாளராக நடித்திருந்த பிரதீப் காப்ரா. இவர்  தர்பார் படத்தில் காமெடி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.