திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 22 ஜூலை 2020 (06:41 IST)

பண்ணை வீட்டில் வாக்கிங் சென்ற ரஜினி: வீடியோ வைரல்

rajini walking
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் லம்போர்கினி காரை ஓட்டி சென்ற புகைப்படம் வைரலானது என்பதும் ‘லயன் இன் லம்போர்கினி’ என்ற ஹேஷ்டேக்’ இந்திய அளவில் டிரெண்ட் ஆனது என்பதும் அனைவரும் அறிந்ததே
 
இந்த நிலையில் நேற்று வெளியான புதிய புகைப்படத்தில் ரஜினியுடன் அவரது இளைய மகள் செளந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் செளந்தர்யாவின் குழந்தை ஆகியோர் இருந்த புகைப்படம் வைரலானது என்பதும், ரஜினியின் பண்ணை வீட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்று சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவும் அவரது ரசிகர்களால் அதிகம் இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இந்த வீடியோவும் வைரலானதோடு சமூக வலைத்தள டிரெண்டிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது