ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (11:07 IST)

திரையுலகில் ஐம்பது ஆண்டுகள் நிறைவு… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க ஆசைப்படும் ரஜினி!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கடந்த 45 ஆண்டுகளாக ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறார். இடையில் அவர் சில ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டாலும் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. இப்போது அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் அவருக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இருந்தாலும் அவர் நடித்த ஜெயிலர் 2 கடந்த ஆண்டு ரிலிஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இந்த படத்தின் அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகி ஷூட்டிங் தொடங்கி அடுத்த ஆண்டுக்குள் இந்த படமும் ரிலீஸாக வேண்டும் என ரஜினி உறுதியாக இருக்கிறாராம். அடுத்த ஆண்டு சினிமாவில் தன்னுடைய பொன்விழா ஆண்டு என்பதால் இரண்டு படங்களை ரிலீஸ் செய்து தன்னுடைய ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என அவர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.