1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (12:42 IST)

45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி - ரஜினி உருக்கம்!

ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியம் குறித்து உருக்கமான பதிவை ஒன்றை போட்டுள்ளார். 
 
ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் சிங்கிள் பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. இந்த பாடலுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடிய கடைசி பாடல் இதுதான்.
 
இந்நிலையில் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியம் குறித்து உருக்கமான பதிவை ஒன்றை போட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, 
 
45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.