Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா இடத்தை நிரப்பவே அரசியலுக்கு வரும் ரஜினி


Abimukatheesh| Last Updated: சனி, 20 மே 2017 (15:20 IST)
தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப அனைவரும் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் ரஜினி இந்த வெற்றிடத்தை குறிவைத்தே அரசியல் களத்தில் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

 
தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்கு அவரது இடத்தை பிடிக்க போட்டிகள் அதிகமாகி கொண்டிருக்கிறது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், மு.க.ஸ்டாலின் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
 
இதற்கிடையில் பாஜக தமிழகத்தில் கால் பதிக்க முயற்சித்து தோல்வியடைந்தது. அதனால் அதிமுக மூலம் தமிழகத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த பாஜக முயற்சித்து வருகிறது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வர போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
 
அரசியல் களம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி பின் வழக்கம் போல் அரசியலுக்கு வருவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து அனைத்து அரசியல் தலைவர்களும் ரஜினி குறித்து விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஜெயலலிதாவால் உருவான வெற்றிடத்தை குறி வைத்தே அரசியலில் களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :