ஜப்பானில் மாணிக் பாட்ஷா - சத்யா மூவிஸ் அறிவிப்பு


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (18:51 IST)
சத்யா மூவிஸின் ஐம்பதாவது ஆண்டையொட்டி ரஜினி நடித்த பாட்ஷா படத்தை டிஜிட்டலில் வெளியிடுகின்றனர். ஜப்பானிலும் படம் வெளியிடப்படுகிறது. 

 

 
டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் முன்னிலை வகிக்க ஆரம்பித்து விட்டது.
 
இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்,
 
ஜப்பான் நாட்டு ரசிகர்கள் எப்போதுமே ரஜினி படங்களை திருவிழா போல் கொண்டாடுவார்கள். அந்த வகையில் அவர்கள் இந்த டிரைலருக்கு அளித்த ஆதரவை வெறும் வார்த்தைகளால் சொல்ல இயலாது. சென்னையில் நடைபெற இருக்கும் சிறப்பு காட்சிக்கு ஜப்பான் ரசிகர்கள் வருகிறார்கள். அவர்கள் ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கவும் இருக்கிறார்கள்.
 
டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் பாட்ஷா படத்தை ஜப்பானில் ஸ்பேஸ் பாக்ஸ் ஜப்பான் நிறுவனம் வெளியிடுகிறது. தற்போது படத்தின் வசனங்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவீன டிஜிட்டல் பாட்ஷா வருகின்ற ஜனவரியில் வெளியாகிறது என கூறப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :