வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (11:38 IST)

ரஜினியின் '2.0' படம் சுமார் 15 மொழிகளில் வெளியீடு!

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தை உலகளவில் சுமார் 15 மொழிகளில் வெளியிட பட தயாரிப்பாளர்கள் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாகவும்,  இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகிவரும் படம்.

 
இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள '2.0' திரைப்படத்தில் இடம்பெறும் விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள், படத்தின்  முக்கிய அம்சமாக இருக்கும் என கூறப்படுகிறது. 
 
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள '2.0' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த செய்திகள்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.