1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 14 ஜனவரி 2022 (10:37 IST)

ஆரோக்கியத்துக்கு மிஞ்சின மருந்து இல்லை: டுவிட்டரில் பொஙகல் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்!

இன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பொங்கல் வாழ்த்துக்களை ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
அனைவருக்கும் வணக்கம்! ஒரு கஷ்டமான, ஒரு ஆபத்தான சூழ்நிலையிலேயே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா  நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் எல்லாம் நியமங்களையும் கண்டிப்பாக கடைபிடிங்க. 
 
ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த பொங்கல் நல்வாழ்த்து டுவிட் வைரலாகி வருகிறது.