1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 3 ஜூலை 2024 (10:09 IST)

கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த டீசரில் ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினிகாந்த் மிரட்டியிருப்பதாக ரசிகர்கள் புல்லரித்தனர். இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் ஜூலை 5 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு தொடர்ந்து 35 நாட்கள் படப்பிடிப்பை இடைவிடாமல் நடத்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இடையில் ரஜினி வேட்டையன் படத்தின் டப்பிங்கில் கலந்துகொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.