வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 1 ஜூலை 2023 (13:59 IST)

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும்  லா லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த்  நடித்து வருகிறார். இந்த படத்தை ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்த படம் இந்தியில் வெளியான கை போ ச்சே என்ற படத்தின் லேசான தழுவல் என தகவல் வெளியானது. இப்படத்தின் ஷூட்டிற்காக திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதுபற்றி அறிந்த ரசிகர்கள் அவரைப் பார்க்க வேண்டுமென கோயிலுக்கு வந்தனர்.

ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து, ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துவிட்டு, தன் காரில் கிளம்பினார்.