Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தியேட்டருக்கு மாறுவேடத்தில் சென்ற ரஜினி - எதற்கு தெரியுமா?


Murugan| Last Modified செவ்வாய், 16 மே 2017 (11:36 IST)
சென்னையில் உள்ள சத்யம் தியேட்டருக்கு நடிகர் ரஜினிகாந்த் மாறு வேடத்தில் சென்று படத்தை பார்த்து ரசித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

 

 
சமீபத்தில் வெளியான பாகுபலி2 படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இப்படம் ரூ.1300 கோடி வசூலித்துள்ளதாக தெரிகிறது. 
 
இந்தப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே, தனது வீட்டிலேயே பார்த்து ரசித்தார். அதன் பின் தனது டிவிட்டர் பக்கத்தில் பாகுபலி படத்தையும், அப்படத்தின் இயக்குனர் ராஜமௌலியையும் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், பாகுபலி2 படத்தை ரசிகர்களோடு பார்க்க விரும்பிய ரஜினிகாந்த், சென்னையில் உள்ள சத்யம் தியேட்டருக்கு மாறுவேடத்தில் சென்று பார்த்துள்ளார் என்ற செய்தி வெளியே கசிந்துள்ளது. 
 
பாகுபலி மட்டுமல்ல, பல படங்களை மாறுவேஷத்தில் சென்று பார்க்கும் பழக்கும் ரஜினிக்கு வெகுநாளாகவே இருக்கிறது. 


இதில் மேலும் படிக்கவும் :