திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 12 நவம்பர் 2023 (10:48 IST)

வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது வீட்டின் முன் திரண்டு இருந்த ரசிகர்களுக்கு நேரில் தோன்றி வாழ்த்துக்களை தெரிவித்தார். 
 
தீபாவளி பொங்கல் உள்பட முக்கிய பண்டிகையின் போது ரஜினி வீட்டிற்கு ரசிகர்கள் செல்வதும் அவர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்துக்கள் தெரிவிப்பதும் வழக்கமான ஒன்றாக உள்ளது 
 
அந்த வகையில் இன்று காலை முதலே ரஜினிக்கு தீபாவளி வாழ்த்து சொல்வதற்காக ரசிகர்கள் அவருடைய வீட்டின் முன் குவிந்திருந்த நிலையில் சற்றுமுன்  ரஜினிகாந்த் தொண்டர்களை பார்த்து தனது கையை அசைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.  
 
புத்தாடை அணிந்து ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்ன ரஜினியை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதனை அடுத்து அனைவரும் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடும்படி அறிவுறுத்திவிட்டு ரஜினிகாந்த் மீண்டும் வீட்டுக்குள் சென்று விட்டார்.  
 
Edited by Siva