எக்ஸ்குளூஸிவ்: ரஜினிக்கு நடந்த அறுபதாம் கல்யாணம்
‘காலா’ படத்தில், ரஜினிக்கு அறுபதாம் கல்யாணம் நடப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, நிகிஷா பட்டேல், அஞ்சலி பட்டில் என 4 ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இதில், ஈஸ்வரி ராவ் ரஜினியின் மனைவியாகவும், ஹுமா குரேஷி காதலியாகவும் நடிக்கின்றனர். தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.
‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் வயதானவராகவே நடிக்கிறார் ரஜினி. அதுவும் அறுபதாம் கல்யாணம் பண்ணிக் கொள்பவராக நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு அறுபதாம் கல்யாணம் நடக்கும் காட்சி, சில நாட்களுக்கு முன்பு சென்னை ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் படமாக்கப்பட்டுள்ளது.