ரஜினி, விஜய் திடீர் சந்திப்பு
ஒருகாலத்தில் ரஜினியின் ஆத்மார்த்த ரசிகனாக இருந்தவர் விஜய். நடுவில் இருவருக்குள்ளும் பெரிய விலகல் ஏற்பட்டது.
இந்நிலையில் ரஜினியை திடீரென்று சந்தித்துள்ளார் விஜய்.
பைரவா படத்தின் ஷுட்டிங் நேற்று எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்த பிறகு, அதேவளாகத்தில் 2.0 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த விஜய், அங்கு நடித்துக் கொண்டிருந்த ரஜினியை சந்தித்தார். அவர்கள் 10 நிமிடங்கள் உரையாடிக் கொண்டிருந்ததாக படக்குழு கூறியுள்ளது.