திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 நவம்பர் 2024 (10:42 IST)

ஓடிடி ரிலீஸ் வேட்டையனைப் பின்னுக்குத் தள்ளிய சமந்தாவின் சிட்டாடல்!

ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸானது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையிக், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் வேட்டையன் படம் உருவானது.

படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைக் கூறினர். இதனால் ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் படத்தை விடக் குறைவான வசூலையே வேட்டையன் பெற்றது. இந்நிலையில் நேற்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்த படம் ரிலீஸானது.

ஆனால் ஓடிடி ரிலீஸில் வேட்டையன் படம் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கவில்லை. ஆனால் சமந்தா மற்றும் வருண் தவான் ஆகியோர் நடித்துள்ள சிட்டாடல் சீரிஸ் ட்ரண்ட்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. சிட்டாடல் நேரடி ஓடிடி ரிலீஸ் என்பதால் அதைப் பார்க்கவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.