சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தலைவர் 161' படத்தின் டைட்டில் ரிலீஸ் -தேதி நேரம் அறிவிப்பு
கடந்த ஒருவாரமாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரை உச்சரிக்காத தமிழக மக்களே இருக்க மாட்டார்கள். ரஜினியின் அரசியல் எப்படி இருக்கும் என்பதுதான் உள்ளூர் தொலைக்காட்சி முதல் தேசிய தொலைக்காட்சி வரை விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் சத்தமில்லாமல் ரஜினியின் அடுத்தபடமான 'தலைவர் 161' படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் மும்பைக்கு சென்றுவிட்டனர். விரைவில் ரஜினியும் மும்பைக்கு செல்லவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் தேதி மற்றும் நேரத்தை இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
'தலைவர் 161' படத்தின் டைட்டில் நாளை காலை சரியாக 10 மணிக்கு வெளியாகவுள்ளது. ரஜினியின் அரசியல் பரபரப்பு காரணமாக அரசியல் சம்பந்தப்பட்ட டைட்டில் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.