1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 25 ஜூன் 2017 (22:19 IST)

பவர்பாண்டி 2' படத்தில் ராஜ்கிரணா? ரஜினியா?

தனுஷ், அமலாபால் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் நடித்த 'விஐபி 2' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று வெளியாகி தனுஷ் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.



 
 
இந்த நிலையில் இந்த விழாவில் 'பவர்பாண்டி 2' படம் குறித்து தனுஷ் பேசியுள்ளார். பவர்பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும் என்றும் அதே நேரத்தில் ஒரே மாதிரியான திரைப்படம் தனக்கு இயக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
 
எனவே 'பவர்பாண்டி 2' படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவார் என்றும் இரண்டாம் பாகத்தில் ராஜ்கிரணுக்கு பதில் ரஜினி நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே இதுகுறித்து உறுதியாக தெரியவரும்