ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (13:57 IST)

''கலைஞர் 100 விழாவில்'' ரஜினி, கமல், அஜித், விஜய் கலந்துகொள்வார்கள்- ஆர்.கே.செல்வமணி

கலைஞர் நூற்றாண்டு விழாவில்  விழாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் கலந்துகொள்வார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்த்திரையுலகம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டுவிழா நடைபெறவுள்ளது.

இந்த விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நேரில் சென்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அழைப்பிதழ் கொடுத்தனர்.

இதையடுத்து, முன்னணி நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்துகொள்ளவுள்ள நிலையில், நடிகர் அஜித், விஜய் இந்த விழாவில் கலந்துகொள்வார்களா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், ''கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர்கள் அஜித், விஜய் வருவார்கள் என்று நம்பிக்கையுள்ளது. நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்போம். எங்களின் கடமை அனைவரையும் அழைப்பவதுதான்! யாரையும் கட்டாயப்படுத்தவில்லை ''என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி தெரிவித்துள்ளார்.

மேலும் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும்கலைஞர் நூற்றாண்டு விழாவில்  விழாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் கலந்துகொள்வார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.