திங்கள், 28 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (07:50 IST)

ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஜெயிலர் 2 எப்போது?... வெளியான தகவல்!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸாகி பெருவெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனால் உடனடியாக ஜெயிலர் 2 உருவாகும் என தகவல்கள் பரவின.

ரஜினியும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது.  தற்போது கூலி படத்தின் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் பிஸியாக இருக்கும் நிலையில் அதை முடித்த பின்னர் சில மாதங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு பின்னர் அவர் ஜெயிலர் 2 வில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிவரை ரஜினிகாந்த் கூலி படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் மார்ச் தொடக்கத்தில் ஜெயிலர் 2 ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.