திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 5 ஜூன் 2020 (23:17 IST)

ரஜினி பட நடிகர்… அதிக மனிதநேயமுள்ளவர்… ரூ. 100 கோடி சம்பளம்!

உலகில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 100 பிரபலங்களின் பட்டியலை பிரபல பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில் , இந்தியாவில் பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான அக்‌ஷய் குமார் ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளதாவது,  பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் அக்‌ஷய்குமார்.அவர் அதிக மனிதநேயமுள்ளவர் எனவும் அவர் ஒரு படத்திற்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறார் என தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு பிரதமரின் நிவாரண உதவிக்கு அக்‌ஷய்குமார் ரூ.25 கோடி கொடுத்து உதவினார் அத்துடன் அவர் மேலும் பல உதவிகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.