1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (15:51 IST)

இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை… ரஜினியை அழைக்கும் ரசிகர்கள்!

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என சென்னையில் சில இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என கடந்த 25 ஆண்டுகாலமாக விவாதங்கள் நடந்துவரும் நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என உறுதியாகக் கூறினார்.  ஆனாலும் அதன் பின்னரும் வரிசையாக படங்களில் நடித்து வருகிறாரே தவிர அரசியல் கட்சிக்கான எந்த பணிகளும் நடக்கவில்லை.

இதனால் ரஜினி கடைசி வரைக்கும் அரசியலுக்கே வரமாட்டார் என சொல்லப்பட்டு வருகிறது. இதனால் அவரை அரசியலுக்கு வரவேண்டும் என போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர் சில ரசிகர்கள். அந்த போஸ்டரில் ‘உண்மையான, நேர்மையான வெளிப்படையான ஊழலற்ற ஆன்மீக அரசியல், இப்போ இல்லைனா எப்பவும் இல்ல, மாற்றத்தை நோக்கித் தமிழகம்.’ எனக் குறிப்பிடபட்டுள்ளது.