1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (21:05 IST)

ரஜினி பட பாடல் காப்பியா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ’தர்பார்’ படத்தின் சிங்கிள் பாடலான ’சும்மா கிழி’ என்ற பாடல் இன்று மாலை வெளிவந்து இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
 
இந்த நிலையில் இந்தப் பாடல் நடன இயக்குனர் கலா மாஸ்டர் அடிக்கடி பயன்படுத்தும் ’சும்மா கிழி’ என்ற வார்த்தையில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட பாடல் என்று ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர் 
 
’சும்மா கிழி’ என்ற வார்த்தையை ரஜினி பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறார் என்றும் ’படையப்பா’ படத்தின் பாடல் ஒன்றுக்கு கலா மாஸ்டரின் சகோதரி பிருந்தா மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்த போது அவருடைய நடனத்தை பாராட்டுவதற்காக ’சும்மா கிழி கிழின்னு கிழிச்சிட்டிங்க’ என்று கூறியதோடு கலா மாஸ்டருக்கும் போன் செய்து உங்கள் சகோதரியை ’சும்மா கிழி கிழி என்று கிழித்து விட்டார்கள் என்று கூறியதாகவும் அந்த வார்த்தையைத் தான் கலா மாஸ்டர் ’மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் பயன்படுத்தியதாகவும் எனவே ரஜினியின் வார்த்தையைத்தான் கலா மாஸ்டர் பயன்படுத்தினாரே தவிர, கலா மாஸ்டரை ரஜினி படக்குழுவினர் காப்பி அடிக்கவில்லை என்று விளக்கம் அளித்தனர்
 
இதனை அடுத்தே சமூக வலைதளங்களில் சும்மா கிழி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது