ரஜினிக்கு எங்களை ஆள தகுதியில்லை: கடுமையாக சாடிய சீமான்!

ரஜினிக்கு எங்களை ஆள தகுதியில்லை: கடுமையாக சாடிய சீமான்!


Caston| Last Modified வெள்ளி, 19 மே 2017 (15:14 IST)
சமீப காலமாக நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்தான பேச்சு அதிகமாக வருகிறது. தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 
 
தற்போது ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினியும் அரசியல் குறித்து அதிகமாகவே பேசுகிறார். இந்நிலையில் இன்று ரசிகர்கள் முன்னிலையில் பேசிய ரஜினி தமிழகத்தில் நல்ல அரசியல் தலைவர்கள் இல்லை என பேசினார்.
 
மேலும் சீமான், அன்புமணி, திருமாவளவன் போன்ற நல்ல அரசியல் தலைவர்கள் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை எனவும் விமர்சித்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
 
ரஜினி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நடிக்கட்டும், எவ்வளவு ஆயிரம் கோடிகளையும் சம்பாதிக்கட்டும், இப்போதும் ரஜினிகாந்தை மதிக்கிறோம். ஆனால் அதை விட்டுவிட்டு அவர் எங்களுக்கு முதல்வராக இருந்து ஆள வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
 
எங்கள் நாட்டை நாங்கள்தான் ஆள வேண்டும். ரஜினியைப் பொறுத்தவரையில், அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இந்த மண்ணில் அவர் கரைந்து வாழ்கின்றவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அவர் இந்த மண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதை நாங்கள் விரும்பவில்லை.
 
ஜல்லிக்கட்டு, கச்சத்தீவு, காவிரி விவகாரம் போன்றவற்றில் ரஜினியின் நிலைப்பாடு என்ன? அரசியலுக்கு அவர் வர வேண்டிய அவசியமே இல்லை என சீமான் கூறினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :