Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கமலுக்கு குறைந்தது அறிவு இருக்கு; ரஜினிக்கு அது கூட இல்லை: அதிர வைக்கும் அதிமுக பேச்சாளர்!

கமலுக்கு குறைந்தது அறிவு இருக்கு; ரஜினிக்கு அது கூட இல்லை: அதிர வைக்கும் அதிமுக பேச்சாளர்!


Caston| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (19:55 IST)
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் மிக முக்கிய விவாதம் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் அரசிலுக்கு வருவார்களா என்பதே. கமல் ஒரு பக்கம் ரஜினி ஒரு பக்கம் அரசியல் குறித்து பேச தற்போது உள்ள அரசியல்வாதிகள் பீதியில் உள்ளனர்.

 
 
இந்நிலையில் சமீபத்தில் பிஹைன் வுட்ஸ் இணையதளத்துக்கு அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில் ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.
 
அந்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியதாவது, கமல்ஹாசன் ஒரு இளைஞர், அவரால் தமிழ் சினிமாவுக்கு நிறைய கௌரவங்கள் கொண்டு வர முடியும். ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால் அவருக்கு சினிமா இருக்கும் போது அவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்.
 
நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. ஜெயலலிதா ஒரு நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்ததை ஏற்றுக்கொண்டோம். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலை வித்தியாசமானது. ரஜினி ஒரு அரசியல்வதியாக தேர்ச்சி பெறவில்லை.
 
ஒரு அரசியல்வாதிக்கு சாதாரண மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான அடிப்படை அறிவு இருக்க வேண்டும். ஆனால் ரஜினிக்கு அது கிடையாது. கமல்ஹாசனுக்கு குறைந்தது அறிவு இருக்கிறது. ஆனால் ரஜினிக்கு அது கிடையாது என ஆவேசமாக பேசியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :