1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 19 ஜூலை 2017 (19:37 IST)

ஹீரோயின் ஆசையை வெளிபடுத்திய ரஜினி மகள்!!

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா விஐபி 2 படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ரிலீஸ் வேலைகளில் சற்று பிஸியாகவே காணப்படுகிறார்.


 
 
இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, விஐபி படத்தின் இரண்டாம் பாகம் அதிரடி கலந்த குடும்ப பாங்கான படமாக தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் உருவாகி உள்ளது. 
 
தமிழில் அஜித் நடிக்கும் படத்தை இயக்கவும், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தை இயக்க ஆர்வமாக உள்ளது. கமல்ஹாசன் மகள்கள் இருவரும் சினிமாவில் நடிக்கிறார்கள். எனக்கும் நடிக்க வாய்ப்புகள் வந்தன. கதைகள் பிடிக்காததால் நடிக்கவில்லை. நல்ல கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் சினிமாவில் நிச்சயம் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.