Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சினிமா பிரச்சினைகளை ரஜினியால் மட்டும்தான் தீர்த்து வைக்க முடியும்: தயாரிப்பாளர் டி.சிவா பேச்சு!

Sasikala| Last Modified புதன், 14 ஜூன் 2017 (10:53 IST)
கவுதம் கார்த்திக்ஸ்ர, தா ஸ்ரீநாத் ஜோடியாக நடித்துள்ள படம் 'இவன் தந்திரன்.' இந்த படத்தை ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் டி.சிவா கலந்துகொண்டு பேசுகையில், "சிறிய, நடுத்தர தயாரிப்பாளர்கள் படங்களை திரைக்கு கொண்டுவர முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். செலவுகள் இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டது. படங்களை வியாபாரம் செய்ய முடியவில்லை. சரக்கு  சேவை வரியான ஜி.எஸ்.டியும் தயாரிப்பாளர்களை நசுக்குகிறது.
 
சினிமா, மனிதர்களை நல்வழிப்படுத்துகிறது. காதல், நட்பு உள்ளிட்ட அனைத்தையும் சினிமா தருகிறது. அந்த சினிமா இப்போது  நன்றாக இல்லை. வரிச் சுமைகளால் தவிக்கிறது. தணிக்கை குழு விதிமுறைகளும் கடுமையாகி விட்டன. இந்த  பிரச்சினைகளை ரஜினிகாந்த் நினைத்தால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும். ஜி.எஸ்.டி. வரி உள்பட சினிமா பிரச்சினைகளுக்கும்  ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும். அவரால்தான் இப்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியும் என்று  தயாரிப்பாளர் டி சிவா கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :