1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (18:00 IST)

“ரஜினி கதை தயார் பண்ண சொல்லி இருக்கிறார்…” சீக்ரெட் உடைத்த மலையாள நடிகர்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ், இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக உள்ளார். தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ள அவர் இயக்குனராகவும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மோகன்லால் நடிப்பில் உருவான லூசிபர் மற்றும் ப்ரோ டாடி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த இரு படங்களும் கவனம் பெற்ற நிலையில் இப்போது அவர் அடுத்து TYSON என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளார். இந்த படத்தை கேஜிஎஃப் மற்றும் சலார் ஆகிய திரைப்படங்களை தயாரித்து, இன்று இந்தியாவின் கவனிக்கப்படும் தயாரிப்பு நிறுவனமாக அறியப்படும் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அவர் நடித்துள்ள கடுவா என்ற திரைப்படம் ரிலீஸாவதை ஒட்டி சென்னையில் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டார். அப்போது பேட்டி அளித்த அவர் “ ரஜினி சார் என்னிடம் ஒரு கதை தயார் செய்ய சொல்லி இருக்கிறார். அதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியாகிவிட்டேன். நான் அவரின் மிகப்பெரிய ரசிகன். அதனால் எந்த குழப்பமும் இல்லாமல் ஒரு கதை அமைந்தால் மட்டுமே அவரை சந்திப்பேன்.” என்று கூறியுள்ளார்.