1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 மே 2017 (16:55 IST)

ரஜினிக்கு இமயமலை… கமலுக்கு?

தமிழ்நாட்டை விட்டால் இமயமலைக்குத்தான் செல்வேன் என ரஜினி கூறியுள்ளார். இந்நிலையில், நாட்டைவிட்டுச் செல்வேன் என்று சொன்ன கமல் எங்கு செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

கடந்த 15ஆம் தேதி முதல் ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. ஐந்தாவது நாளான நேற்று கடைசியாக ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, ‘எனக்கு எல்லாமே ரசிகர்கள் தான். எனக்கு அடையாளம் கொடுத்தது தமிழர்கள் தான். தமிழ்நாட்டை விட்டு என்னைத் தூக்கிப்போட்டால் இமயமலையில் தான் போய் விழுவேன்” என்று பேசினார்.

சில வருடங்களுக்கு முன்பு ‘விஸ்வரூபம்’ ரிலீஸாகாமல் பிரச்னை எழுந்தபோது, ‘நாட்டைவிட்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை’ என்று கமல் சொன்னார். ஆனால், அவர் எங்கு சொல்வேன் எனச் சொல்லவில்லை. இதைவைத்து மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.