வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (15:04 IST)

“தயவு செஞ்சு வீடியோ போடாதீங்க.. உங்கள பாக்க கஷ்டமா இருக்கு” – தயாரிப்பாளரிடம் ரஜினி வேண்டுகோள்!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து பல படங்களை தயாரித்து விநியோகம் செய்தவர் தயாரிப்பாளர் வி ஏ துரை. எவர் கிரீன் மூவி இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்தியவ இவர், என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா, நாய் குட்டி, காகித கப்பல் ஆகிய படங்களை தயாரித்தார். இந்த படங்களில் பிதாமகன் தவிர மற்ற படங்கள் எவையும் வெற்றிகரமான படமாக அமையவில்லை. இதனால் தனது சொத்துகளை இழந்த துரை, ஒரு கட்டத்தில் நலிந்த தயாரிப்பாளராக காணாமல் போனார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அதில் தான் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலில் புண் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மருந்து வாங்க காசு கூட இல்லை என்று உதவி கேட்டு பேசியுள்ளார். இதையடுத்து துரையின் நீண்டகால நண்பரான ரஜினிகாந்த் அவருக்கு உதவி செய்வதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ள துரையிடம் பேசியுள்ள ரஜினிகாந்த் “உங்களைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு. நீங்க வீடியோ போடவேணாம். யாருக்கும் பேட்டியும் கொடுக்கவேணாம். நான் உங்கள பாத்துக்குறேன்” எனக் கூறி நம்பிக்கை அளித்துள்ளதாக பத்திரிக்கையாளர் அந்தணன் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.