வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 28 நவம்பர் 2014 (14:56 IST)

விஎஸ்ஓபிக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லையாம் - சொல்வது இயக்குனர் ராஜேஷ்

டாஸ்மாக் காட்சியும், சந்தானமும் இல்லாமல் படம் எடுப்பதில்லை இயக்குனர் ராஜேஷ். ஆர்யா, சந்தானம், தமன்னா நடிக்கும் அவரது புதிய படத்தின் பெயர், வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க. சுருக்கமாக விஎஸ்ஓபி.
 
பிரபல மது வகைகளுக்கு விஎஸ்ஓபி என்று அடைமொழி தரப்படுவதுண்டு. பாட்டில் ஸ்டிக்கரிலேயே இது இருக்கும். அதற்கும் படத்துக்கும் சம்பந்தமில்லை என்றார் ராஜேஷ். 
 
படத்தின் கதை நட்பை பற்றியதாம். வாசுவாக நடிக்கும் ஆர்யாவும், சரவணனாக நடிக்கும் சந்தானமும் கதைப்படி நண்பர்கள். அதைதான் படத்தின் பெயராக்கியிருப்பதாக கூறுகிறார் (அப்படீன்னா வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்றுதானே இருக்க வேண்டும்?)
 
அழகுராஜா படத்தின் போது, என்னுடைய படங்களில் இனி புகைப்பிடிக்கும் காட்சி இருக்காது என்றார் ராஜேஷ். அதன்படி இந்தப் படத்திலும் புகைக்கிற காட்சி நஹி. குடிக்கிற காட்சி...?
 
ஹி..ஹி... அது இல்லாமலா?