செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 16 ஏப்ரல் 2020 (12:25 IST)

விரைவில் ஹாரிஸ் கல்யானை திருமணம் செய்துகொள்ள போகிறேன் - தடாலடியாக கூறிய ரைசா!

மாடல் அழகியான ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னர்  "வேலையில்லா பட்டதாரி 2"  படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஹாரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமா திரையில் அடியெடுத்து வைத்தார்.

இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து நிறைய காதல் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அதை இருவரையும் மறுத்து வந்தாலும் ரைசாவிற்கு ஹாரிஸ் கல்யாண் மீது ஒரு கண்ணு இருக்கு என்பதை அவரே நிறைய பேட்டிகளில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் பேசிய ரைசாவிடம் "ஹாரீஷ் அண்ணாவும் நீங்களும் கல்யாணம் பண்ணிப்பீங்களா?" என்று ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த ரைசா... ஆமாம், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம். ஆனால், இந்த விஷயம் நமக்குள் மட்டும் இருக்கட்டும் இதை அவரிடம் சொல்லி விடாதீர்கள். அவருக்கு இது சர்ப்பிரைஸ்” என கிண்டலாக பதிலளித்து ஹாரிஸ் மீது அலாதி பிரியம் இருப்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.