1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 19 டிசம்பர் 2019 (17:41 IST)

ரைசாவின் வாயில் விழுந்த போன் - பிதுங்கிய உதடு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ரைசா செல்ஃபி எடுக்கும்போது காயமடைந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
 
மாடல் அழகியான ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் இதற்கு முன்னரே  விஐபி 2 படத்தில் சைடு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
இதையடுத்து தற்போது ஆலிஸ் என்ற படத்தில் வெயிட்டான கதாபாத்திரத்தில் ரைசா நடித்து வருகிறார். அதோடு எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை அகத்திய படங்களை கைவசம் வைத்து கொண்டு படு பிஸியாக நடித்து வருகிறார். 
இந்நிலையில், செல்ஃபி மீதுள்ள மோகத்தால் ரைசா இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட படுத்துக்கொண்டே போட்டோ எடுத்துள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக அவரது வாயில் போன் விழுந்து உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அதையும் விட்டு வைக்காமல் காயமுற்ற வாயை போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.