திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2019 (09:14 IST)

எதிர்த்த வீட்டு ஆயா இப்படித்தான் இருக்கும்... ரைசா ஹேர் ஸ்டைலை கலாய்க்கும் ரசிகர்கள்!

ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை அவரது ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்து தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் ரைசா.  இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி 2 படத்தில் நடித்திருந்தார்.
 
அதனை தொடர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ஆலிஸ் என்ற படத்திலும் ஜிவி பிரகாஷுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 
இந்நிலையில் தற்போது ரைசா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் புதிய ஹேர்ஸ்டைலை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 
'தலையில் என்ன ஸ்பீட் பிரேக்கரா?', எங்க எதிர்த்த வீட்டு ஆயா இப்படித்தான் இருக்கும் எனவும், மிகவும் மோசமாக உள்ளது என கலாய்த்து வருகின்றனர்.