எல்லாரும் சேர்ந்து ஜூலியை தூக்கி போட்டு மிதிப்போம்: சினேகன் அடாவடி


sivalingam| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (22:31 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை வீழ்த்த மீதியுள்ள அனைத்து பங்கேற்பாளர்களும் இணைந்து ஒட்டுமொத்தமாக டார்ச்சர் கொடுத்தும் முடியாமல் விழிபிதுங்கி இருக்கின்றனர்.


 
 
இந்த நிலையில் ஓவியா தினமும் ஒரு பிரச்சனையை எழுப்புவதால் தான் அவர் ஃபேமஸ் ஆகிறார். எனவே நாளை முதல் நாமும் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை எழுப்புவோம் என்று ரைசா ஐடியா கொடுக்கின்றார்.
 
உடனே சினேகன், 'ஒகே நாளை முதல் நாம எல்லோரும் பிரச்சனை செய்வோம், முதலில் நான் ரைசாவை அடிக்கின்றேன், அப்புறம் ரைசா என்னை அடிக்கட்டும், அதுக்கு அப்புறம் நாம எல்லாரும் சேர்ந்து ஜூலியை தூக்கி போட்டு மிதிப்போம். இப்படி செய்தால் கேமிரா நம்மை மட்டுமே கவர் செய்யும், ஓவியாவை மறந்துவிடுவார்கள்' என்று கூறினார். எனவே நாளை முதல் ஏதோ வித்தியாசமாக நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :