வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 28 பிப்ரவரி 2015 (13:47 IST)

ஒரே மாதிரியா இசையமைத்து போரடித்துவிட்டது - ரஹ்மான் சலிப்பு

ரஹ்மானின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ஜெய்ஹோ ஆவணப்படம் நியூயார்க்கில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதற்காக நியூயார்க் வந்த ரஹ்மான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
இப்போது திரைக்கதை, திரைப்பட தயாரிப்பு போன்ற துறைகளில் தீவிரமாக செயல்படத் துவங்கியுள்ளேன். ஒரு திரைப்படத்தில் நடிக்கிறேன். அனைத்து திரைப்படங்களுக்குமே ஐந்து மெலோடி பாடல்கள், ஒரு குத்துப் பாட்டு என்று தான் இசையமைக்க வேண்டியுள்ளது. ஒரே மாதிரியாக, திரும்ப திரும்ப இசையமைப்பது போரடித்து விட்டது. இதை தாண்டி புதிதாகவும், சவாலாகவும் எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 
 
எனவே தான் திரைக்கதை எழுதுவது, படங்கள் தயாரிப்பது போன்ற துறை களில் கால் பதித்துள்ளேன். பாம்பே ட்ரீம்ஸ் இசை ஆல்பத்துக்கான பணியில் ஈடுபட்டிருந்த போது, பிரிட்டனைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாய்ட் வெப்பேர், ஙஉங்களுக்கு கதை, திரைக்கதை குறித்து ஆர்வம் உள்ளதா என கேட்டார். ஒரு நாள், நம்மால் ஏன் முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான தேடல் தான், தற்போது என்னை திரைக்கதை எழுத வைத்துள்ளது என்றார் அவர்.