Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

“ஸ்ரீதேவியை மிஸ் பண்றேன்” – ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்

rehman
CM| Last Modified சனி, 14 ஏப்ரல் 2018 (12:56 IST)
‘ஸ்ரீதேவியை தற்போது மிஸ் பண்றேன்’ என உருக்கமாகத் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். ‘காற்று வெளியிடை’ படத்தின் பாடல்கள் மற்றும் ‘மாம்’ படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துப் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “காற்று வெளியிடை படத்துக்கு தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. ஏனென்றால், மணிரத்னம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் பர்சன். என்னுடைய அருமை அண்ணன், வழிகாட்டி மணிரத்னத்துக்கு மீண்டும் நன்றி.‘மாம்’ படத்துக்கு இசையமைக்க வேண்டும் என ஸ்ரீதேவியே சென்னை வந்து என்னிடம் கேட்டார். நாட்டுக்குத் தேவையான விஷயங்கள் அதில் இருந்ததால் உடனே ஒப்புக் கொண்டேன். அந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்திருப்பதில் சந்தோஷம். ஸ்ரீதேவியை தற்போது மிஸ் பண்றேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.


இதில் மேலும் படிக்கவும் :