1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2024 (20:36 IST)

பிரமாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
 
ஹிந்தி டப்பிங் உரிமையை வாங்கும் பிரபலம் ஒருவர் ராகவா லாரன்ஸை வைத்து, தமிழில் ஒரு புதிய படம் தயாரிக்கவுள்ளதாகவும், இப்படத்தை அவர் சத்யஜோதி பிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார் என தகவல் வெளியாகிறது.
 
இப்பட ஷூட்டிங் மே மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும், இப்படத்திற்கு பிரமாண்ட பொருட்செலவில் இதுவரை அவரது படங்களில் இல்லாத அளவுக்கு தயாரிக்கவுள்ளதாகவும்,  
 
இந்தி நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கிறார் எனவும், இப்படம்குழந்தைகளை கவரும் வகையில் தாய்லாந்தில் ஷூட்டிங் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இப்படத்திற்கு பிறகுதான் ரகவா லாரன்ஸ், செளந்தர்யா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
 
தற்போது ராகவா லாரன்ஸ், செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்திற்காக புதுச்சேரியில் டிக்சனில்  உள்ளது குறிப்பிடத்தக்கது.