புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 3 ஜூலை 2022 (17:30 IST)

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’ருத்ரன்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Rudhran
ராகவா லாரன்ஸ் நடித்த ’ருத்ரன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ருத்ரன் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் ’ருத்ரன்’ திரைப்படம் கிறிஸ்மஸ் நாளில் வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் இந்த படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது