ஒரே நாளில் வெளியாகும் லாரன்சின் இரண்டு படங்கள்


bala| Last Modified புதன், 1 பிப்ரவரி 2017 (12:44 IST)
தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்று வெடிகுண்டு வீசியிருக்கிறார் லாரன்ஸ். ஜல்லிக்கட்டில் கிடைத்த ஆதரவை வைத்து அவர் இப்படியொரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அரசியல் என்பது வெறும் பண உதவியை மட்டும் வைத்து வருவதில்லை என்பதை பாவம் லாரன்ஸ் புரிந்து கொள்ளவில்லை.

 

நிற்க. நாம் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல. லாரன்ஸ் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா இரு படங்களும் பிப்ரவரி 17 வெளியாவதாக சம்பந்தப்பட்டவர்கள் தனித்தனியே விளம்பரம் செய்துள்ளனர்.

ஒரு நடிகரின் இரு படங்கள் ஒரேநாளில் வெளியானால் இரண்டு படங்களும் பாதிக்கப்படும். அப்படியொரு ரிஸ்க் எடுக்க விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் துணிய மாட்டார்கள். அதனால், கடைசி நேரத்தில் இரண்டில் ஏதாவது ஒரு படம்தான் திரைக்கு வரும்.

முதலில் தொடங்கப்பட்ட படம் என்ற நிலையில் மொட்ட சிவா கெட்ட சிவா பிப்ரவரி 17 வெளியாகவே அதிக சாத்தியமுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :