செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (15:32 IST)

பாரதிராஜா குணமாக மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்த ராதிகா

bharthiraja
இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அவர் குணமாக மெழுகுவர்த்தி ஏந்தி நடிகை ராதிகா பிரார்த்தனை செய்து உள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
தமிழ் திரையுலகின் இயக்குனர் இமயம் என்ற பெருமைக்குரியவர் பாரதிராஜா என்பதும் இவர் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இயக்குனர் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் என் வாழ்க்கையில் விளக்கேற்றிய பாரதிராஜா அவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்து வேண்டிக் கொள்கிறேன் என்றும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோவை இணையதளங்களில் ஆளாகி வருகின்றன.