வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (14:14 IST)

மி டூ நீர்த்துப் போய் விட்டது – ராதிகா ஆப்தே கருத்து !

ராதிகா ஆப்தே

மேற்குலகில் சினிமா துறையில் உருவான மி டூ என்ற இயக்கம் அதன் பின்னர் இந்தியாவுக்கு கடந்த ஆண்டு இறுதியில் வந்தது.

சினிமா உள்ளிட்ட துறைகளில் இருக்கும் பெண்கள் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லை மற்றும் அத்துமீறல்களை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். இப்படி பலபேர் வெளியே சொல்ல ஆரம்பித்ததை அடுத்து அது ஒரு இயக்கமாக மாறியது. அதனை மி டூ எனப் பெயரிட்டு அழைத்தனர்.

இந்த மிடூ இயக்கம் கடந்த 2018 ஆம் ஆண்டு கடைசியில் இந்தியாவுக்கு அறிமுகமானது. இந்தி, தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் இதுபற்றிய வெளிப்படையான குரல்கள் எழுந்தன. இந்த மி டூ புகாரில் சில முக்கிய பிரமுகர்களின் பெயர்களும் இடம்பெற்று இருந்தன.

இந்த நிலையில் மீ டூ வந்து ஓராண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில் நீர்த்து போய்விட்டதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர் ‘மீ டூ வந்தபோது நிறைய பேர் மாட்டுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் எதுவுமே மாறவில்லை. மீ டூ நீர்த்து போய்விட்டது’ எனக் கூறியுள்ளார்.