திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (16:24 IST)

பாஜகவில் ராதிகா & சரத்குமார்? அடுத்தடுத்த விழும் விக்கெட்கள்!

நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் விரைவில் பாஜகவில் விழப் போவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

பாஜக 2021 சட்ட சபைத் தேர்தலை முன் வைத்து பிரபலங்களை தங்கள் கட்சிக்கு இழுக்க முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக நடிகை குஷ்புவை கட்சியில் சேர்த்துள்ளது. இதையடுத்து பாஜக கட்டம் கட்டியுள்ள பிரபலங்கள் பட்டியலில் பாக்யராஜ், பாண்டியராஜன் மற்றும் பார்த்திபன் ஆகிய மூன்று இயக்குனர் நடிகர்களை டார்கெட் செய்ய முடிவு செய்துள்ளது. இவர்கள் எல்லாம் ரிட்டையர் ஆகி வீட்டில் இருக்கும் நிலையில் அவர்களை வைத்து பாஜக என்ன செய்ய போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது நடிகர்கள் ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார் ஆகியவர்களும் பாஜகவில் விரைவில் சேரப்போகிறார்கள். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியையும் பாஜகவில் இணைத்து பொறுப்பு வாங்க உள்ளதாக தெரிகிறது.