ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 அக்டோபர் 2021 (14:39 IST)

வெளியானது ராதே ஷ்யாம் படத்தின் டீசர்!

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

பாகுபலி, சாஹோ உள்ளிட்ட பிரம்மாண்டமான படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் மற்றொரு பிரம்மாண்டமான படம் ராதே ஷ்யாம். 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் டீசர் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

டீசரி பிரபாஸ் கைரேகை நிபுணராக நடித்துள்ளது போன்ற காட்சிகள் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த படம் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.