1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 9 டிசம்பர் 2019 (12:05 IST)

ஆக்ஷன் ராணியாக இறங்கி அடிக்கும் திரிஷா - ட்ரெண்டான "ராங்கி" டீசர்!

தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் கதாநாயகி திரிஷா 96 படத்தின் வெற்றியை தொடர்ந்து கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில்  "எங்கேயும் எப்போதும்" பட இயக்குனர் சரவணன் த்ரிஷாவை வைத்து "ராங்கி" என்ற படத்தை இயக்கி வருகிறார்.
 
ஹீரோயினை மையப்படுத்தி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. சத்யா இசையமைத்துள்ள இப்படத்தில் திரிஷா Third Eye மீடியா நிறுவனத்தின் CEO வாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இயக்குனர்  ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ளார்.
 
இந்நிலையில் இப்படத்தின் டீசரை நேற்று லைக்கா நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதிரடி ஆக்ஷன் களத்தில் இறங்கி அடிக்கும் த்ரிஷாவை இந்த படத்தில் புது பரிணாமத்தில் பார்க்கமுடிகிறது. ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த டீசர் தற்போது யூடியூபில் ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது.