1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 மே 2021 (11:47 IST)

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வேண்டும்… முதல்வரிடம் கோரிக்கை!

தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் சினிமா சம்மேளனத் தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆர் கே செல்வமணி நேரில் சந்தித்து கோரிக்கைகளை வைத்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் 14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்களும் முடங்கியுள்ளன. இதில் சினிமா படப்பிடிப்புகளும் அடக்கம், இந்நிலையில் சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி கேட்டு பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.