திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (08:52 IST)

புஷ்பா 2 திரைப்படத்தில் சாய் பல்லவியா? படக்குழு தகவல்!

நடிகை சாய்பல்லவி புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா the Rule உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயலும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லுவதாக இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்படுகிறது. இதற்காக ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் படத்தின் பூஜை நடந்தது. இந்நிலையில் இந்த இரண்டாம் பாகத்துக்காக அல்லு அர்ஜுனுக்கு 125 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பல சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தை விட அதிகம் என்பது குறிப்பிடடத்தக்கது. புஷ்பா முதல் பாகம் இந்தியா முழுவதும் ஹிட்டானதை அடுத்து இரண்டாம் பாகத்துக்கு உள்ள எதிர்பார்ப்பு காரணமாக இவ்வளவு பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் சாய் பல்லவி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அந்த தகவலில் உண்மையில்லை என படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.